உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பொதுஇடங்களில் புகை அதிகரிப்பு கட்டுப்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு --நடவடிக்கை எதிர்பார்ப்பு

பொதுஇடங்களில் புகை அதிகரிப்பு கட்டுப்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு --நடவடிக்கை எதிர்பார்ப்பு

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் பெட்டிக்கடைகள், டீக்கடைகள், நிழற்குடைகள் பொது இடங்களில் புகை பிடிக்கும் செயலால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பாதிப்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.பொது இடங்களில் புகை பிடித்தாலோ, புகையிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்ந்தாலோ சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன் போலீசார் உதவியுடன் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை உள்ளது.இருப்பினும் அரசு சார்பில் தீவிர நடவடிக்கை இல்லாததால் டீக்கடை, நிழல் கூடைகள், பொது இடங்களில் எந்தவித பயமும் இன்றி பலரும் புகைக்கின்றனர். புகைப்பவரை காட்டிலும் அவர் அருகில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முக்கிய காரணியாக புகைப்பிடிப்பது உள்ளது.பொது இடங்களில் புகைப்பது உண்ணுவது போன்ற பழக்கங்களை ஒழிக்க அரசு சட்டம் விதித்தும் நடவடிக்கைகளை கண்டு கொள்ளாததால் காலப்போக்கில் மக்களிடம் இருந்து இது குறித்து அச்சம் இல்லாமல் போனது.எனவே மக்களின் நலனை காக்கும் விதமாக பொது இடங்களில் புகைப் போர் மீது பழையபடி சுகாதாரத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அபராதம் விதித்து கட்டுப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ