மேலும் செய்திகள்
சிறுத்தை தாக்கியதில் வனத்துறை ஊழியர் காயம்
09-Nov-2025
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மது போதையில் வாலிபர்கள் பேப்பர் கட்டிங் நிறுவனத்தில் பெட்ரோல் குண்டு வீசியதில் உரிமையாளர் காயமடைந்தார். 3பேர் கைது செய்யப்பட்டனர். சிவகாசி விஸ்வநத்தம் ரோடு பகுதியில் கென்னடி கண்ணன் 50, என்பவர் பட்டாசு தயாரிக்க தேவைப்படும் பேப்பர் கட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று காலையில் வாலிபர்கள் சிலர் நிறுவனத்தின் அருகே மது அருந்தியுள்ளனர். கென்னடி கண்ணன் கண்டித்ததால் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். மதியம் 3:30 மணி அளவில் ஊழியர்கள் பணியில் இருந்த போது 4 வாலிபர்கள் நிறுவனத்தின் பின்பக்க ஜன்னல் வழியாக பெட்ரோல் குண்டை வீசினர். இதில் கென்னடி கண்ணன் காயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அனில் குமார் டி.எஸ்.பி., சம்பவ இடத்தை பார்வையிட்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். மூன்று பேர் கைது கட்டிங் நிறுவனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார் , சம்பவத்தில் ஈடுபட்ட காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தங்கபாண்டி 25, தங்கம் 23, ராம்ஜி 18 ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
09-Nov-2025