மேலும் செய்திகள்
மருந்தியல் அலுவலர் வலியுறுத்தல்
30-Jun-2025
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனை முன் அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்புதல், தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட 39 நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர்களை பணிவரன் முறை செய்தல் உட்பட 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைவர் முனீஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பு செயலாளர் அரசு, செயலாளர் பாரதி, தணிக்கையாளர் மதன் குமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா, அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்க மாநில செயலாளர் பாண்டித்துரை, தி ரேடியோலாஜிகல் அசிஸ்டெண்ட்ஸ் அசோசியேஷன் மாவட்ட செயலாளர் அசோக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
30-Jun-2025