உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

துாங்கிய கண்டக்டரின் பணப்பை திருட்டுவத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து தினமும் இரவு 10:00 மணிக்கு புறப்பட்டு இலந்தைகுளத்தில் இரவு ஹால்ட் ஆகும் வகையில் ஒரு மகளிர் இலவச பஸ் இயக்கப்பட்டு வருகிறது.அதன்படி நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு புறப்பட்டு இலந்தை குளத்திற்கு சென்ற அரசு பஸ்ஸை டிரைவர் தியாகராஜன் ஓட்டிச் சென்றுள்ளார். தற்காலிக கண்டக்டராக குருவாயூரப்பன் பணியாற்றி உள்ளார்.இரவில் கிராமத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு இருவரும் தூங்கியுள்ளனர். நள்ளிரவில் சிறுநீர் கழிக்க கண்டக்டர் குருவாயூரப்பன் எழுந்து பார்க்கும் போது, பணப்பையை காணவில்லை. அப்பகுதியில் தேடிப் பார்த்தபோது வெறும் பை மட்டுமே கிடந்துள்ளது. அதிலிருந்து பணம் ரூ.2400 திருடப்பட்டுள்ளது.இதனையடுத்து இருவரும் டிப்போ மேனேஜருக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். நத்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.சிறுமி கர்ப்பம்; கணவன்மாமியார் மீது வழக்குவிருதுநகர்: விருதுநகர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் சரவணன் 19. இவர் காரியப்பட்டி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை காதலித்து 2025 பிப்ரவரியில் திருமணம் செய்து சிறுமி கர்ப்பமாக்கினார். 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை கர்ப்பமாக்கிய கணவன் சரவணன், அவரது தாய் மாரியம்மாள் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை