போலீஸ் செய்திகள்
தற்கொலைசிவகாசி:சிவகாசி அருகே திருத்தங்கல் முத்து மாரியம்மன் காலனியை சேர்ந்தவர் சூரிய பிரபா 28. இவரது கணவர் தர்மலிங்கம் 33. இவர்களுக்கு 5, 3 மூன்று வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். தர்மலிங்கத்திற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சூரிய பிரபா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.------இரு தரப்பினர் மோதல் 10 பேர் கைதுசிவகாசி: திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்த 17, 16 வயதுடைய இரு சிறுவர்கள் மது அருந்திவிட்டு பனையடிப்பட்டி தெருவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த சிவா 25, நண்பர்கள் சிறுவர்கள் இருவரையும் அடித்தனர். இதனைத் தொடர்ந்து சிறுவனின் தரப்பைச் சேர்ந்த நண்பர்கள் சிவா மற்றும் அவரது நண்பர்களை தாக்கினர். திருத்தங்கல் போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து 10 பேரை கைது செய்தனர்.----