உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

பஸ்சில் தவறி விழுந்து கல்லுாரி மாணவர் பலி விருதுநகர்: திண்டுக்கல் மாவட்டம் அய்யன்குளத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் 18. இவர் சிவகாசி ஆனைக்குட்டத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் டிப்ளமோ பிசியோதெரபி படித்து வந்தார். இவர் நேற்று மாலை தனியார் பஸ்சில் முன்பக்கத்தில் ஏறி சென்ற போது கை நழுவி ரோட்டில் விழுந்ததால் பின்பக்க டயர் தலையில் ஏறி பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். வாலிபர் மாயம் சாத்துார்: சாத்துார் படந்தாலை சேர்ந்தவர் மகாராஜா, 23. ஆக.31 ல் காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை மாயமானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். இருவர் கைது சாத்துார்: சாத்துார் நத்தத்து பட்டியை சேர்ந்தவர்கள் மாரிமுத்து, 22. மணிகண்டன், 25. இருவரும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில் மது குடித்துவிட்டு போதையில் பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவை கம்பால் அடித்து உடைத்தனர் . போலீசார் இருவரையும் கைது செய்தனர். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர். காருடன் பட்டாசு பறிமுதல் சாத்துார்: ஏழாயிரம் பண்ணையில் நேற்று மதியம் 12:00 மணிக்கு போலீசார் வாகன சோதனை செய்தபோது ஸ்ரீவில்லிப்புத்துார் கான்சாபுரம் திருநாவுக்கரசு, 32. அனுமதி இன்றி 30 ஷாட் பேன்சி ரக பட்டாசுகளை காரில் கொண்டு சென்றார்.பட்டாசுடன் காரை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை