உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

பட்டாசு திரி பதுக்கியவர் கைதுவிருதுநகர்: செங்குன்றாபுரத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார் 30. இவர் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மிஷின் திரிகள் 7 கட்டு பதுக்கி வைத்திருந்தார். இவரை ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.ஓடையில் விழுந்து பலிசிவகாசி: சிவகாசி அனுப்பன்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் 45. இவர் அனுப்பன்குளம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள ஓடையில் மது போதையில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் 4 பேர் காயம்ராஜபாளையம்: ராஜபாளையம் விஷ்ணு நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் 35, சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். விடுமுறையில் ராஜபாளையம் வந்து மனைவி ஜெயச்சித்ரா 30, மகன்கள் உதய் அருண் 6, தனு கார்த்திக் 4, ஆகியோருடன் தென்காசி ரோடு அரசு மருத்துவமனை அருகே சென்ற போது மக்களை தேடி மருத்துவ வேன் பின்புறம் மோதியதில் துாக்கி வீசப்பட்டதில் காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுப்பப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டைப்பட்டியை சேர்ந்த டிரைவர் நாகராஜனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.பட்டாசு பறிமுதல்: ஒருவர் கைதுசாத்துார்: சாத்துார் தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் மணி, 40.வீட்டில் வைத்து உதிரி சோல்சா வெடி தயாரித்தார். ரோந்து சென்ற போலீசார் அவரிடம் இருந்து பட்டாசை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ