விஜய கரிசல்குளம் அகழாய்வில் மெருகேற்றும் கல் கண்டெடுப்பு
சிவகாசி:விருதுநகர்மாவட்டம் விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் மெருகேற்றும் கல் கண்டெடுக்கப்பட்டது.இங்கு மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 3300 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது மெருகேற்றும் கல் கண்டெடுக்கப்பட்டது.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில் 'முன்னோர் இப்பகுதியில் சங்கு வளையல்கள் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் நடத்தியதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. இந்த அலங்காரப் பொருட்களை மெருகேற்றி பாலிஷ் போடவும், வீட்டில் தரை தளத்தை சமப்படுத்துவதற்கும் இந்தக்கல் பயன்பட்டுள்ளது என்றார்.