உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தபால் அனுப்பும் போராட்டம்

தபால் அனுப்பும் போராட்டம்

திருச்சுழி:திருச்சுழி, நரிக்குடி சந்திப்புகளில் சிலம்பு எக்ஸ்பிரஸ் நின்று செல்ல கோரி இந்திய கம்யூ., சார்பில் தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடந்தது. செங்கோட்டை, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக சென்னை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் திருச்சுழி, நரிக்குடி சந்திப்புகளில் பயணிகளை ஏற்றி சென்றது. கொரோனா பொது முடக்கத்திற்கு பின், 2 சந்திப்புகளிலும் சிலம்பு ரயில் நிற்பதில்லை. தினமும், 50 மேற்பட்ட பயணிகள் அருப்புக்கோட்டை, விருதுநகர், மதுரை சென்று ரயில் ஏற வேண்டியுள்ளது. திருச்சுழியில் இந்திய கம்யூ., சார்பாக, ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில், திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் சிலம்பு எக்ஸ்பிரஸ் நின்று செல்ல வலியுறுத்தி, மதுரை ரயில்வே கோட்ட மேலாளருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது. திருச்சுழி நகர செயலாளர் செந்தூர்பாண்டி, துணை செயலர் பெரியண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் சங்கரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். -----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை