உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மகப்பேறு நிதி கிடைக்காமல் சிரமத்தில் கர்ப்பிணிகள்

மகப்பேறு நிதி கிடைக்காமல் சிரமத்தில் கர்ப்பிணிகள்

நரிக்குடி : நரிக்குடி மேலக்குமிலாங்குளத்தில் மகப்பேறு நிதி கிடைக்காததால் கர்ப்பிணிகள் சிரமத்தில் உள்ளனர். நரிக்குடி மேலக்குமிலாங்குளத்தில் 30க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவி 3 ஆண்டுகளாக சரிவர வழங்கவில்லை. இதில் யாருக்கும் ரூ. 18 ஆயிரம் முழுமையாக கிடைக்கவில்லை. பிரசவத்திற்கு உதவியாக இருக்கும் என பலர் எதிர்பார்த்து காத்திருந்தனர். உரிய நேரத்திற்கு கிடைக்காததால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது உள்ள கர்ப்பிணிகளுக்காவது இந்த நிதி முழுமையாக கிடைக்க நடவடிக்கை வேண்டும். அதற்கு நரிக்குடி வட்டார மருத்துவ அலுவலர் ஆய்வு செய்து மகப்பேறு நிதி உதவியை உடனடியாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என கர்ப்பிணிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி