நுாலகத்திற்கு நிதி ஒதுக்கியும் அனுமதி வழங்காததால் சிக்கல்-- இட நெருக்கடியில் வாசகர்கள்
தளவாய்புரம்: செட்டியார்பட்டி அருகே முகவூர் கிளை நுாலகத்திற்கு கூடுதல் கட்டடத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டு உபகரணங்கள் வந்த நிலையில் ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி இல்லாததால் மாணவர்கள் வாசகர்கள் இட நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். முகவூர் ஊராட்சி அலுவலகத்தை ஒட்டி 7 சென்ட் இடத்தில் 600 ச.அடி கழிப்பறை வசதியுடனான கட்டடம் கட்டப்பட்டு கிளை நுாலகம் இயங்கி வருகிறது. இதில் 91 புரவலர்களுடன் 200 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள நிலையில் நுாலகத்திற்கு 4 பேர் மட்டும் அமரும் வகையில் வாசிப்பு அறை உள்ளது. இதற்கான கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய நாற்காலிகள், புத்தகம் வைப்பதற்கான பீரோ உள்ளிட்ட உபகரணங்கள் காட்சி பொருளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கூடுதல் கட்டடத்திற்கான அனுமதி ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்காததால் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் போதிய இட வசதி இன்றி நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கூடுதல் கட்டடம் கட்ட நடவடிக்கைக்கு முன் வரவேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.