உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பழைய தங்க நகைகளை புதியதாக மாற்றும் திட்டம்

 பழைய தங்க நகைகளை புதியதாக மாற்றும் திட்டம்

சிவகாசி: பழைய நகைகளை முதல் முறையாக 0 சதவீதம் பிடித்தத்துடன் பண்டிகை கால எக்ஸ்சேஞ்ச் திட்டத்தை டாடா தனிஷ்க் அறிமுகம் செய்துள்ளது, என அதன் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் தெரிவித்தார். இதுகுறித்து சிவகாசி கிளை டாடா தனிஷ்க் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் கூறுகையில், இந்தியாவின் தேவையில் ஏறக்குறைய 99 சதவீதம் என்ற அளவிற்கு தங்கம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த முரண்பாடுக்கு தீர்வு காண பழைய தங்க நகைகளை புதிய, நவீன வடிவமைப்புகளாக மாற்றிக் கொள்வதன் மூலம் நம் நாடு தங்க இறக்குமதிக்காக பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்கிறது. இந்த இயக்கத்தின் மைய மதிப்பீடுகளை முன்னிலைப்படுத்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உடன் தனிஷ்க் இணைந்திருக்கிறது. 2025 நவ. 30 வரை அனைத்து கேரடேஜ்களிலும் (9 கே.டி. என்ற குறைந்த அளவு வரை) பழைய தங்க நகைகளை மாற்றும்போது 0 சதவீதம் பிடித்தம் என்ற சிறப்பு சலுகையை நுகர்வோர்களுக்காக தனிஷ்க் முதன் முறையாக வழங்குகிறது. கடந்த பல ஆண்டுகளாக, தனிஷ்க்கின் தங்க பரிமாற்ற திட்டத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பங்கேற்று 1.7 லட்சம் கிலோ தங்கத்தை மறுசுழற்சி செய்திருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி