ஆர்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் நிலங்கள் தனியாருக்கு வாடகைக்கு விட்ட செயல் அலுவலர் சக்கரையம்மாள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னு பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி பேசினர். நகர செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.