உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வழங்கல்

விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வழங்கல்

விருதுநகர்: விருதுநகரில் வேளாண் பொறியியல் துறை மூலம் ரூ.52 லட்சம் மானியத்தில் விவசாய இயந்திரங்களை விவசாயிகளுக்கு கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.10 டிராக்டர்கள், 4 பவர்டில்லர்கள், 3 பவர் வீலர்கள் என மொத்தம்17 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. சூரிய மின்சக்தி ஆற்றலும் காலநிலை மாற்றமும் என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டுப் பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் மதுரை வேளாண் கல்லுாரியைச் சேர்ந்த 40 மாணவர்கள் கலந்துகொண்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் விஜயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ