உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிதம்பராபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம்

சிதம்பராபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். துணை கலெக்டர் காளிமுத்து வரவேற்றார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: மனுக்கள் அனைத்தும் 30 நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்பட்டு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுபட்டு போன மகளிர் உரிமை தொகை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மகளிர், குழந்தைகள்,மாணவர்கள், முதியோர்கள், விவசாயிகள் என முதல்வர் பார்த்து பார்த்து ஒவ்வொருவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார் என பேசினார்.தாசில்தார் செந்தில்வேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை