காலை உணவின் தரம்: கலெக்டர் ஆய்வு
விருதுநகர்: விருதுநகர் குந்தலப்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளியில் கலெக்டர் சுகபுத்ரா காலை உணவுத் திட்ட உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.காலை, மதிய உணவிற்கு பயன்படுத்தப்படும், காய்கறிகள், மளிகைப் பொருட்கள், முட்டைகளின் தரம் குறித்து கேட்டறிந்தார். கிருஷ்ணன்கோவில் அரசு மாதிரி பள்ளியில் ஆய்வு செய்து மாணவர்களின் கற்றல் திறன், கற்பித்தல் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.ஆமத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.