ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: விருதுநகர் ஸ்டேஷன் முன் சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன் சார்பில் 8வது சம்பள கமிஷனை அமைப்பது, 10 சதவீத காலியிடங்களை இருந்தால் தான் ஐ.ஆர்.டி., இடமாற்றம் என்ற ரயில்வே போர்டு உத்தரவை உடனே நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை கோட்டச் செயலாளர் ரபீக் தலைமை வகித்து பேசினார். உதவி கோட்டசெயலாளர்ஜோதிராஜன், விருதுநகர் கிளை செயலாளர் பாண்டித்துரை, சிவகாசி கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.