கோடையில் பயணிகளை குளிர்விக்கும் ரயில்வே
விருதுநகர்; நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோடை வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் மக்கள் அவதியுற்று வரும் நிலையில், தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டத்தினர் பயணிகளை குளிர்வித்து வருகின்றனர்.மதுரைக் கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், துாத்துக்குடி ஸ்டேஷன்களில் ஒரு நிலையம் ஒரு பொருள்' திட்டத்தின் கீழ் பயணிகளுக்கு இளநீர் வழங்கப்படுகிறது.இதனால் பயணிகள் இளைப்பாறுவதுடன் தென்னை விவசாயிகளும் பயன்பெறுகின்றனர். விருதுநகர் ஸ்டேஷனில் நாகர்கோவில் - கோவை ரயில் பயணிகளுக்கு தாகம் தணிக்க மண்பானைக் குடிநீர் வழங்கப்பட்டன.