உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நெடுஞ்சாலையில் மழை நீர் தேக்கம்-- வடிகால் இல்லாததால் சேதமாகும் அபாயம்

நெடுஞ்சாலையில் மழை நீர் தேக்கம்-- வடிகால் இல்லாததால் சேதமாகும் அபாயம்

ராஜபாளையம்: ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் விரைவில் சேதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் நகர் வழியே திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் காந்தி சிலை ரவுண்டானா முதல் சொக்கர் கோயில் வரை உள்ள சாலையில் பல ஆண்டுகளாக மழைநீர் வடிகால் துார் வாரும் பணி நடைபெறவில்லை. இதனால் சாலையின் இரண்டு பக்கமும் தற்போது மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகளை பாதிப்பதுடன் ரோடு விரைவில் சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வசந்த், நெரிசல் மிகுந்த இப்பகுதி நெடுஞ்சாலையில் மழைநீர் வெளியேற வழி இல்லை. ரோட்டில் இரண்டு பக்கமும் வணிக நிறுவனங்கள் தங்கள் பங்கிற்கு மண்ணை போட்டு மேடாக்கி வைத்துள்ளனர். சாலையும் முறையாக அமைக்கப்படாததால் லேசான மழைக்கே கழிவு நீரோடு மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில் வாகனங்கள் செல்லும் போது மழைநீர் வாகன ஓட்டிகள் மீது சிதறுவதுடன், ரோட்டின் தாங்கு திறன் விரைவில் பலம் இழந்து விடும். இரண்டு பக்கமும் மழைநீர் வடிகால் ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை