உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ரம்ஜான் நோன்பு துவக்கம்

 ரம்ஜான் நோன்பு துவக்கம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட இஸ்லாமியர்கள் நேற்று முதல் ரம்ஜான் நோன்பை துவக்கினர். மாவட்டத்தில் ரம்ஜான் மாதத்தின் முதல் நோன்பை துவக்கி நேற்று அதிகாலை 5:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை இஸ்லாமியர்கள் உணவருந்தாமல் இருந்தனர். மாலை நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கஞ்சியும், பேரீச்சம் பழமும் உட்கொண்டு நோன்பை திறந்தனர். விருதுநகரில் கல்பள்ளி வாசல் ஜமாத், பெரிய பள்ளி வாசல், தவ்ஹீத் ஜமாத், சின்ன பள்ளிவாசல் ஜமாத் ஆகிய பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. 29 நாட்கள் கழித்து பிறை பார்த்து ரம்ஜான் கொண்டாட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை