மேலும் செய்திகள்
மில் தொழிற்சங்க கூட்டம்
29-Sep-2025
ராஜபாளையம்: ராஜபாளையம் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிஷன் போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ரூ.10 கோடி பட்டுவாடா செய்ய சேர்மன் பி ஆர் வெங்கட்ராமராஜா உத்தரவிட்டுள்ளார். 2025 ஆண்டிற்கான போனஸ் பேச்சுவார்த்தை ராம்கோ சேர்மன் பி.ஆர் வெங்கட்ராமராஜா, ராமராஜூ சர்ஜிகல் காட்டன் மில் நிர்வாக இயக்குனர் ராம்குமார் ராஜா, விஷ்ணு சங்கர் நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம ராஜா முன்னிலையில் நடந்தது. இதில் நுாற்பாலை பிரிவு தலைவர் மோகனரெங்கன், தலைமை நிதி அதிகாரி அருள் பிரணவம், துணை பொது மேலாளர் சண்முகராஜ், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நிதி அதிகாரி விஜயகோபால் தொழிற்சங்கம் சார்பில் கண்ணன், விஜயன் உள்ளிட்ட தொழிலாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் இந்த ஆண்டு தொழிலாளர்களுக்கான போனஸ் தொகை ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
29-Sep-2025