உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்; வாலிபர், பெற்றோர் மீது வழக்கு

மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்; வாலிபர், பெற்றோர் மீது வழக்கு

சாத்துார்; விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வாலிபர், அவரது பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சாத்துார் அருகே ஒரு கிராமத்தைச்சேர்ந்த பெண்ணுக்கு 19 வயதான மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி மகள் உள்ளார். வீட்டில் தனியாக இருந்தபோது முறை பையனான மாரியப்பன் மகன் மாணிக்கம் இவரை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.மாணிக்கத்திடம் கேட்டபோது முறை பெண்தானே நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியதோடு திருமணம் செய்ய வரதட்சணையாக வீடு, 10 பவுன் நகை, ரூ.50,000 ரொக்கமும் கேட்டுள்ளார்.இரு வீட்டாரும் சம்மதித்து விட்ட நிலையில் திருமணத்தை தள்ளிப் போட்டு வந்த மாணிக்கத்திற்கும் மற்றொரு பெண்ணிற்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக அறிந்து அவர்களது வீட்டிற்கு சென்று அப்பெண்ணின் தாயார் கேட்டபோது ,மாணிக்கம்,தந்தை மாரியப்பன், தாய் மாடத்தி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தனர்.3 பேர் மீதும் சாத்துார் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ