மேலும் செய்திகள்
உங்களுக்கு ஏற்ற பறவை; தேர்வு செய்யலாம் இப்படி
20-Sep-2025
விருதுநகர்: விருதுநகர் அருகே குல்லுார்சந்தை அணையில் நீர் சூழ்ந்த பகுதியில் செங்கால், சாம்பல் நாரை பறவைகள், சிறிய நீர் காகங்கள் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் அக். மாதம் வந்தும் போதிய அளவில் மழை பெய்யாத சூழல் உள்ளது. இதனால் நீர் வாழ் உயிரினங்கள் நீரை தேடி அலைகின்றன. அவ்வப்போது மாலை பெய்து வரும் மழையால் குல்லுார்சந்தை அணையின் ஒரு பகுதியில் செங்கால், சாம்பல் நாரைகள், சிறிய நீர் காகம் போன்ற பறவைகள் வந்துள்ளன. செங்கால் நாரைகள் நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இவை மரங்களில் கூடுகட்டுகின்றன. இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளில் அதிகம் காணப்படும். இந்தப் பறவைகளுக்கு நீர்வாழ் உயிரினங்கள் தான் முக்கிய உணவு. முட்டையிட எங்கே கூடு கட்டுவது என்பதை ஆண் பறவையே முடிவு செய்யும். சாம்பல் நாரைகள் நீருக்கு அருகிலேயே வாழும் பறவையினம். மிகவும் உயரமாக, ஒல்லியாக நீண்ட வளைந்த கழுத்துடனும் இருக்கும். பறக்கும் போது ஆங்கில எழுத்தான எஸ் வடிவில் கழுத்தை மடித்து வைத்துக்கொண்டு பறக்கும். சிறிய நீர்காகங்களும் ஈரநிலங்கள், கடற்கரையோரங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. இதுநாள் வரை அடித்த கடும் வெயிலால் நீர்நிலைகள் பக்கம் கரை ஒதுங்காத பறவைகள், நேற்று மேகமூட்டமான வானிலை காணப்பட்டதால் கரை ஒதுங்கி பார்வையாளர்களுக்கு ரசிக்கும்படியாக இருந்தது.
20-Sep-2025