உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாடகை கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்கள் இடமாற்றம்

வாடகை கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்கள் இடமாற்றம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் வெவ்வேறு இடங்களில் வாடகை கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களை, பழைய தாலுகா அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என கலெக்டரிடம் எம்.எல்.ஏ. மான்ராஜ் மனு அளித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு புதிதாக சொந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளதால் பழைய அலுவலக கட்டடம் காலியாக உள்ளது. இதனைப் பயன்படுத்தாமல் இருந்தால் அலுவலக கட்டடம் வீணாகும் அபாயம் உள்ளது. இந்நிலையில் கிருஷ்ணன் கோவிலில் இயங்கும் வட்டார கல்வி அலுவலகம், ராஜபாளையத்தில் இயங்கும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம், வணிகவரித்துறை அலுவலகம் ஆகியவற்றை ஸ்ரீவில்லிபுத்துார் பழைய தாலுகா அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என கலெக்டர் சுகபுத்திராவிடம் எம்.எல்.ஏ. மான்ராஜ் மனு அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை