உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சத்திரப்பட்டி அய்யனாபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சத்திரப்பட்டி அய்யனாபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே அய்யனாபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.ஏ.ஓ., அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டவர்களை ராஜபாளையம் தெற்கு போலீசார் கை து செய்தனர். அய்யனாபுரத்தில உள்ள ஊரணியை சுற்றி 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் தனிநபர் ஆக்கிரமித்து வீடுகட்டியதோடு நடைபாதையில் மாடுகளை கட்டி தடை ஏற்படுத்தி வந்தார். இதற்கு அப்பகுதியில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி வி.ஏ.ஓ., அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றி தருவதாக வருவாய் துறையினர் உறுதி அளித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இந்நிலையில் நேற்று வருவாய் துறையினர் ஆக்கிரமித்தவரின் வீடு , மாட்டு தொழுவத்தினை அகற்றியதோடு அதைச் சுற்றி ஆக்கிரமிப்பில் இருந்த மற்றொரு வீடு ,இரண்டு விசைத்தறி கூடங்களையும் அகற்றினர். ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யனாபுரம் வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை