உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் நான்கு ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகளை மாநில நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி துறை அதிகாரிகள் நேற்று அகற்றினர். ஜூலை 28 ல் ஆண்டாள் தேரோட்டம் நடக்க உள்ள நிலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் ரவி, நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நெடுஞ்சாலை, நகராட்சி துறை ஊழியர்கள் நேற்று காலை நான்கு ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தேருக்கு இடையூறாக இருக்கும் மர கிளைகளை வெட்டினர். ரத வீதிகளில் சேதம் அடைந்த பகுதிகளில் புதிதாக தார் ரோடு போடப்பட்டுள்ளது. உடனடியாக மீண்டும் ரோடுகளை ஆக்கிமிரப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !