உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துாரில் சேதமான ரோடு சீரமைப்பு

சாத்துாரில் சேதமான ரோடு சீரமைப்பு

சாத்துார் : சாத்துார் - - கோவில்பட்டி நான்கு வழிச்சாலை மேற்கு பக்க சர்வீஸ் ரோடு தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டுள்ளது.சாத்துார் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலையின் மேற்கு பக்க சர்வீஸ் ரோட்டில் பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் ரோடு மழைநீர் தேங்கியதால் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களில் பாரம் தாங்காமல் பிதுக்கம் ஏற்பட்டு கற்கள் குவிந்து மேடாக காணப்பட்டது.இதில் மோதி இருசக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் விபத்திற்கு ஆளாகும் நிலை இருந்தது. இதனை சுட்டிக்காட்டி தினமலரில் படத்துடன் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து நகாய் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டனர்.தற்போது சேதம் அடைந்த பேவர் ப்ளாக் ரோடு சீரமைக்கப்பட்டு உள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இதனால் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை