மேலும் செய்திகள்
காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சரிபார்ப்பு
08-Sep-2025
சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி பெரியகுளம் கண்மாய் வழியாக விஸ்வநத்தம் செல்லும் உடைந்த குழாய் சரி செய்யப்பட்டு குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டது. சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சிக்கு பெரியகுளம் கண்மாயிலுள்ள கிணற்றிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இதற்காக கண்மாயில் துாண்கள் அமைக்கப்பட்டு இரும்பு குழாய் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இரும்பு குழாய் சேதமடைந்து ஐந்து ஆண்டுகளாக குடிநீர் வீணாக கண்மாயில் கலந்தது. இதனால் விஸ்வநத்தம் ஊராட்சி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே சேதம் அடைந்த குழாயினை அகற்றி வேறு குழாய் அமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக உடைந்த குழாய் சரி செய்யப்பட்டு குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
08-Sep-2025