உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாறுகாலில் விழுந்த மாடு மீட்பு

வாறுகாலில் விழுந்த மாடு மீட்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சியில் வாறுகால்கள் கட்டும் பணி நடந்து வருகின்றன. வேலாயுதபுரம் பகுதி மதுரை ரோட்டில் சில மாதங்களுக்கு முன்பு வாறுகால் கட்டப்பட்டது. ஸ்லாப் போடாததால் திறந்த வெளியாகவே உள்ளது. நேற்று முன்தினம் இரவு வாறு காலில் காளை மாடு தவறி விழுந்துவிட்டது. தலைகீழாக விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. தீயணைப்பு துறையினர் மாட்டை போராடி மீட்டனர்.நகராட்சியினர் பணி முடிந்ததும் வாறுகால் மேல் ஸ்லாப் வைத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ