உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் பணி நெருக்கடி, அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி விருதுநகரில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று பணி முடியும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே வெளிநடப்பு செய்தனர். கலெக்டர் அலுவலகம், விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட 10 தாலுகா அலுவலகங்கள் ஆகியவற்றில் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் அக்பர்ஷா தலைமை வகித்தார். மாநில தலைவர் முருகையன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி