உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் பாத்திமா நகரில் ரோடு பணி துவக்கம்

விருதுநகர் பாத்திமா நகரில் ரோடு பணி துவக்கம்

விருதுநகர் : விருதுநகரில் மில்லிங் முடிந்து ரோடு போடாமல்காத்திருந்த நிலையில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் நேற்று புதிய ரோடுகள் அமைக்கப்பட்டன.விருதுநகர் நகராட்சி பகுதிகளில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ரோடு போடப்படும். கடைசியாக 2020லும், கொரோனா ஊரடங்கால் 2021லும் ரோடு போடப்பட்டது. தற்போது கச்சேரி ரோடு, பாத்திமா நகர் மெயின் ரோடு, லெட்சுமி காலனி, பி1பி1 ரோடு, தாளையப்பன் தெரு, வாடியான் தெரு, தெப்பம் தெற்கு ரத வீதி, படேல் ரோடு உள்ளிட்ட ரோடுகளில் புதிய ரோடு போடுவதற்காக 13 நாட்களுக்கு முன் மில்லிங் பணிகள் செய்யப்பட்டு ரோடுகள் தோண்டப்பட்டன.இந்நிலையில் 11 நாட்களாக ரோடு போடாமல் தாமதித்து வந்தனர். காமராஜர் பிறந்த நாள் விழா வரவுள்ளதை சுட்டி காட்டி இவ்வாறு ரோடுகளை தோண்டி போட்டிருப்பது சிரமத்தை ஏற்படுத்தும் என தினமலர்நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று தோண்டிய இடங்களில் புதிய ரோடுகள் அமைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி