உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீபாவளி கடை என சாலையோரம் ஆக்கிரமிப்பது அதிகரிப்பு

தீபாவளி கடை என சாலையோரம் ஆக்கிரமிப்பது அதிகரிப்பு

விருதுநகர் : விருதுநகரில் தீபாவளி கடை என அடையாள அட்டை இல்லாத சாலையோர கடைகள் சீசனாக ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது. இதற்கு நகராட்சியும், போலீசும் வழிவிடுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகரில் நகராட்சி பகுதியில் தேசப்பந்து மைதானத்தில் தீபாவளி கடைகள் எனும் பெயரில் தற்காலிக சிறிய ஜவுளி சீசன் கடைகள் புதிதாக முளைத்துள்ளன. ஏற்கனவே விருதுநகர் மெயின் பஜார், தேசப்பந்து மைதானம் மக்கள் சென்று வர முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புக்கு பிடியில் பரிதவிக்கும் சூழலில், தற்போது புதிதாக முளைக்கும் கடைகளுக்கு யார் அனுமதி கொடுத்தது என தெரியவில்லை. நகராட்சியும், போலீசாரும் சேர்ந்து முறையற்ற அனுமதி கொடுப்பதாக புகார் உள்ளது. ஏற்கனவே உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. சாலையோர விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் விற்பனை அடையாள அட்டை, உரிமம், இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய இயலும் சூழலில் தீபாவாளி கடை என அவர்களிடம் 'கவனிப்பை' பெற்றுக்கொண்டு ஆக்கிரமிப்புக்கு வழிவிடுகின்றனர். இந்த ஆக்கிரமிப்பாளர்கள் தீபாவளி முடிந்த பிறகும் இடத்தை விடாமல் பிடித்துக் கொள்கின்றனர். இது தான் ஒவ்வொரு ஆண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க காரணமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தீபாவளி பண்டிகை காலத்தில் மெயின் பஜார்களில் சாலையோர அடையாள அட்டை, விற்பனை உரிமம் இல்லாத கடைகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் தீபாவளி பொருட்களை வாங்க வழிவகை செய்ய வேண்டும். இது குறித்து சாலையோர வியாபாரிகள் எம்.எல்.ஏ.,விடம் முறையிட்டுள்ளனர். எனவே சீசன் வியாபாரிகளை கட்டுப்படுத்தி ஆக்கிமிப்புகளை குறைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ