ரோட்டோர சுவரொட்டிகளால் கவனச்சிதறல், விபத்து வாய்ப்பு
விருதுநகர்: மாவட்டத்தில் தேவையின்றி வளைவுகளில் ஒட்டப்படும் சுவரொட்டிகளாலும் கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.ரோட்டோரம் அமைந்துள்ள போலீஸ் அவுட்போஸ்ட்கள், வளைவுகளில், நான்கு வழிச்சாலை பேரிகார்டுகளில் நிதி ஆதரவு வழங்கி தனியார் நிறுவன விளம்பரங்கள் அமைக்கப்பட்டு அவை கவனச்சிதறலை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே தனியார் நிறுவனங்கள் பல மின்கம்பங்களில் விளம்பர பலகைகள் பொருத்தியுள்ள நிலையில் இது போன்ற கூடுதல் விளம்பரங்கள் அதிகளவில் கவனச்சிதறலை ஏற்படுத்தும். விபத்து அச்சத்தை அதிகரிக்கும்.மாவட்டத்தில் நடக்கும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் கவனக்குறைவால் நடக்கிறது. ரோட்டில் பயணம் செய்யும் இடத்தில் கவனச்சிதறல் ஏற்படாமல் வாகனங்களை இயக்குவதே விபத்தை குறைக்கும். ஆனால் திட்டங்களுக்காக ரோட்டில் வைக்கப்படும் இது போன்ற விளம்பரங்கள் நிதி பற்றாக்குறையை சமாளிக்க உதவும். அதே நேரம் தேவையற்ற கவனச்சிதறலை ஏற்படுத்தவும் தவறுவதில்லை, என்கின்றனர்.