மேலும் செய்திகள்
ரூ. 4 .52 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
10-Sep-2026
சிவகாசி: சிவகாசி குறுவட்ட ஆய்வாளர் பிரசன்னா, கிராம உதவியாளர் முத்துராஜ், வருவாய் துறையினர் பாறைப்பட்டி பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு பட்டாசு கடை வளாகத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர். அதிகாரிகளைக் கண்டவுடன் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தப்பி ஓடிவிட்டனர். கிழக்கு போலீசார் அங்கிருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து பட்டாசு தயாரித்த சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்த ஈஸ்வரன், செல்வம், குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
10-Sep-2026