உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / துாய்மை பணிக்கு மாதம் ரூ.30 லட்சம் செலவு அள்ளப்படாத குப்பை, தேங்கும் கழிவுநீர்

துாய்மை பணிக்கு மாதம் ரூ.30 லட்சம் செலவு அள்ளப்படாத குப்பை, தேங்கும் கழிவுநீர்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சியில் துாய்மை பணிக்கு மாதம் ரூ. 30 லட்சத்திற்கும் மேல் செலவழித்தும் நகரில் பிரதான வாறுகால்களில் குப்பையும், கழிவுநீரும் தேங்கி கிடக்கிறது. அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இவற்றில் குப்பைகளை அள்ளுவதற்கும், வாறுகால்களை பராமரிப்பு பணி செய்யவும் நகராட்சியின் துப்புரவு பிரிவு இயங்கி வருகிறது. இந்த பிரிவில் நிரந்தர பணியில் 73 பேரும், ஒப்பந்த அடிப்படையில் 181க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களும், பணியில் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் துப்புரவு பணிக்கு என்றே 30 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்படு கிறது. அடைபட்டு கழிவுநீர் வெளியேற முடியாமல் உள்ளது. சிறிய மழை பெய்தால் கூட மழைநீரும் கழிவு நீரும் கலந்து ரோடுகளில் ஓடுகிறது. திருச்சுழி ரோடு, பழைய தேவாங்கர் கல்லூரி ரோடு, விருதுநகர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கில் நிதியை கொட்டி வாறுகால் அமைத்துள்ளனர். முறையான தரமான பணிகள் செய்யாததால் வாறுகால் சீராக இல்லாததால் கழிவுநீர் வெளியேற முடியாமல் உள்ளது. இது போல் நகரில் பிரதான வாறுகால்கள் பல பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மழைக் காலங்களில் மழை நீர் வெளியேற முடியாமல் ரோட்டில் தேங்கி மக்களை பாடாய்ப் படுத்து கிறது. இதனால் பிரதான வாறுகால்களை மழைக்கு முன் துார்வாறுவதில் துப்புரவு பிரிவின் அலட்சியம் காட்டியதால் மழை வெள்ளம் தேங்கி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு மாதமும் 30 லட்சத்திற்கு மேல் நகராட்சி நிதியில் செலவு கணக்கு காட்டப்படுகிறது. ஆனால், பயன் ஒன்றும் இல்லை. கலெக்டர் நகராட்சியில் ஒப்பந்த பணியாளர்கள், நிரந்தர பணியாளர்கள் முறையாக பணியில் உள்ளனரா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ