உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு போக்குவரத்து கழகத்தில் வாரிசு வேலைக்கான விதிகள் மாற்றம்

அரசு போக்குவரத்து கழகத்தில் வாரிசு வேலைக்கான விதிகள் மாற்றம்

விருதுநகர்:அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிபவர் இறந்தால் அவரின் வாரிசு தாரர்களுக்கு வழங்க வேண்டிய வேலை உரிய காலத்திற்குள் வழங்கப்படுவதில்லை. விதிகளும் அடிக்கடி மாற்றப்படுவதால் வாரிசுதாரர்கள் கவலை அடைந்துள்ளனர்.தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர், மெக்கானிக், அலுவலர் உள்ளிட்ட பணிகளில் இருப்பவர்கள் பணிக்காலத்தில் இறந்து விட்டால் அவர்களின் வாரிசு தாரர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. வாரிசுதாரர்களாக 18 வயது பூர்த்தி அடையாத நிலையில் குழந்தைகள் இருக்கும் போது மனைவிக்கு வாரிசு வேலைக்கு பதிவு செய்யலாம். குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடைந்ததும் தாய்க்கு பதில் அவருக்கு வாரிசு வேலை வழங்கப்பட்டது. ஆனால் இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாரிசு வேலைக்கு முதலில் யாருக்கு பதிவு செய்யப்படுகிறதோ அவர் மட்டுமே வேலை பெற முடியும். அதையும் ஓராண்டிற்குள் பதிவு செய்ய வேண்டும். இப்படி பதிவு செய்து வைத்தாலும் வாரிசு வேலையை கிடைப்பதற்கு பல ஆண்டுகள் ஆகிறது. விதிகளில் மாற்றம் செய்வது வேலையை கொடுக்காமல் தட்டி கழிக்கும் செயல் என வாரிசுகள் குமுறுகின்றனர். பணிமனைகளில் ‛குரூப் டி' பணிகளில் பணிபுரிந்து இறந்தவர்களின் மனைவியருக்கு கேண்டீன்களில் சமையலர், உதவியாளர் பணி தரப்பட்டது. னால் கேண்டீன்கள் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு வருவதால் இந்த பணியிடங்களும் பறிபோய்விட்டன. எனவே வாரிசு தாரர்களுக்கு வழங்க வேண்டிய பணியை உரிய காலத்திற்குள் வழங்க போக்குவரத்துக்கழகம் முன்வர எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி