கல்லுாரியில் சரஸ்வதி பூஜை
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை கல்லுாரி, கல்வியியல் கல்லுாரிகளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. மாணவிகளும், பேராசிரியைகளும் கோலமிட்டு அம்மனை அலங்கரித்தனர். சரஸ்வதிக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவிற்கு கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கலைக் கல்லூரி செயலர் இளங்கோவன், பி.எட்., கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன், போக்குவரத்து செயலாளர் விக்னேஷ், நிர்வாக உறுப்பினர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.