ஆண்டாள் கோயிலில் இன்று சயன சேவை
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுடன் இணைந்த கிருஷ்ணர் கோயிலில் இன்று (ஜூலை 26) இரவு 7:00 மணிக்கு சயன சேவை நடக்கிறது. ஆடிப்பூர திருவிழாவில் ஏழாம் திருநாளான இன்று காலை 10:00 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம் எழுந்தருளல் நடக்கிறது. ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனதிருக்கோல சேவை இரவு 7:00 மணிக்கு துவங்கி 11:00 மணி வரை நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட் ராமராஜா, செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.