வட்டார தடகள போட்டியில் எஸ்.பி.கே., பள்ளி சாம்பியன்
அருப்புக்கோட்டை : தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக நடந்த வட்டார அளவிலான தடகள போட்டிகளில், 58 பள்ளிகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14, 17, 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த புள்ளிகளை பெற்று பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.சாதனை படைத்த மாணவர்களை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், பள்ளி செயலர் காசிமுருகன், தலைவர் ஜெய்கணேஷ், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் உறவின்முறை உறுப்பினர்கள் பாராட்டினர்.