பள்ளி மாணவர்கள் வேளாண் சுற்றுலா
திருச்சுழி : திருச்சுழி வேளாண்துறை சார்பில் எம்.ரெட்டியபட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்களை வேளாண் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர். நரிக்குடி அருகே களத்துாரில் உள்ள சன் பார்ம் நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீன் அமிலம், பஞ்சகவ்யா, மண்புழு உரம் தயாரித்தல், கிர் மாடுகளில் கிடைக்கும் பால், தயிர், அவற்றிலிருந்து செய்யப்படும் சத்தான பொருட்கள் குறித்து விளக்கப்பட்டது. சொட்டுநீர் பாசன முறைகள், கீரை வகைகள் இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கள் குறித்தும் காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை வேளாண் உதவி இயக்குனர் காயத்ரிதேவி தலைமையில் தொழில்நுட்ப மேலாளர் பிரேமா, உதவி மேலாளர் ராஜா மற்றும் ஆசிரியர்கள் செய்தனர்.