உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்

காரியாபட்டி: காரியாபட்டி சேது பொறியியல் கல்லுாரியில், வேளாண் பொறியியல் துறை சார்பாக, மாணவர்களுக்கு தொழில் முனைவோர், புத்தாக்க கண்டுபிடிப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது. நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார் மரக்காயர், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். தமிழ்நாடு தொழில் முனைவோர் புத்தாக்கத்துறை இயக்குனர் அம்பலவாணன், மாநில தொழில் முனைவோர் புத்தகக் கண்டுபிடிப்புகள் துறை மேலாளர் சண்முகராஜ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !