உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  அங்கன்வாடி மையம் முன்பு தேங்கிய கழிவுநீர்

 அங்கன்வாடி மையம் முன்பு தேங்கிய கழிவுநீர்

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் முத்து மாரியம்மன் காலனி அங்கன்வாடி மையம் முன்பு தேங்கியுள்ள கழிவு நீரால் குழந்தைகள் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். திருத்தங்கல் முத்து மாரியம்மன் காலனியில் அங்கன்வாடி மையத்தில் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அங்கன்வாடி மையம் முன்பு தாழ்வாக இருப்பதால் சமீபத்தில் பெய்த மழை நீர் வெளியேறாமல் தேங்கி விட்டது. இது தற்போது கழிவுநீராக மாறிவிட்டது. இதில் அதிக அளவு கொசு உற்பத்தியாகியுள்ளது. இதனால் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகள் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் குழந்தைகள் கழிவுநீரில் தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது. டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது கழிவு நீர் அடிக்கப்பட்டு அங்கன்வாடி மையத்தில் தெறிக்கிறது. எனவே இங்குள்ள கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ