உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலைய பணிகள் மந்தம்

பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலைய பணிகள் மந்தம்

விருதுநகர்: விருதுநகர் நகராட்சியில் பாதாளசாக்கடை திட்டத்தின் சுத்திகரிப்பு நிலைய பணிகள் மீண்டும் மந்தமாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விருதுநகர் அல்லம்பட்டியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு 36 வார்டுகளின் பாதாளசாக்கடை இணைப்புகளின் கழிவுகளும் வருகிறது. இங்கு சுத்திகரித்து கவுசிகா நதியில் தண்ணீர் வெளியிடப்படுகிறது. இதில் முறையாக சுத்திகரிப்பு நடப்பதில்லை என குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.மே மாதம் திருப்பூர் மாவட்டத்தில் சாய ஆலையில் ஏழு அடி ஆழமுள்ள செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி மூவர் இறந்தனர். அந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களில் விருதுநகரில் இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள தொட்டிகளில் அடைபட்ட மண்ணை சுத்தம் செய்யும் பணியில் துாய்மை பணியாளர்கள் கையுறை, காலுறை எதுவுமின்றி வெறுங்கால், கைகள் கொண்டு சுத்தம் செய்தனர். இதற்கு பின் துாய்மை பணிகள் செய்து சுத்திகரிப்பு நிலையம் முழுவீச்சில் இயங்கி வந்தது.இந்நிலையில் இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் செயல்பாடு மீண்டும் மந்தமாகி உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மீண்டும் பாதாளசாக்கடை லீக்கேஜ் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் லிப்டிங், பம்பிங் ஸ்டேஷன்களிலும் கழிவுநீரை அனுப்ப முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இந்த பாதாளசாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து முழுவீச்சில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை