மேலும் செய்திகள்
ரூ. 2 லட்சம் நகை திருட்டு கடலுாரில் துணிகரம்
21-May-2025
நரிக்குடி: நரிக்குடி மறையூரைச் சேர்ந்தவர் கருப்பையா 59. இவர் இருஞ்சிறை விலக்கில் உள்ள டாஸ்மாக் கில் ஊழியராக வேலை செய்து வருகிறார். அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி இந்திராணி கவனித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பெட்டிக்கடையை அடைத்து விட்டு இந்திராணி வீட்டிற்கு சென்றார். கருப்பையா பாரில் இருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்டிக் கடைக்கு தீ வைத்தனர். பெட்டிக்கடை முழுவதும் எரிந்து நாசமாயின. இதைத் தொடர்ந்து அதே மர்ம நபர்கள் அவரது வீட்டிற்கும் தீ வைத்தனர். இந்திராணி தீ எரிவதை கண்டு அலறி அடித்து வெளியில் ஓடினார். நரிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
21-May-2025