உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின் ஊழியர்கள் பற்றாக்குறை பொறியாளர்கள் அல்லல்

மின் ஊழியர்கள் பற்றாக்குறை பொறியாளர்கள் அல்லல்

விருதுநகர்:தமிழகத்தில் மின் ஊழியர்கள் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. தற்போது பருவமழை காலமாக உள்ளதால் சீரமைப்பு பணிகள் செய்ய முடியாமல் பொறியாளர்கள் திண்டாடுகின்றனர்.தமிழக மின்வாரியத்தில் 24 ஆயிரம் கள உதவியாளர், 10 ஆயிரம் வயர்மேன்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை சரி செய்யாததால் வயர்மேன்கள், கள உதவியாளர்கள், கேங் மேன்கள் என மூவருக்கும் கூடுதல் பணி சுமை உள்ளது. 4க்கும் மேற்பட்ட பகுதிகளை ஒரே வயர் மேன பார்க்கிறார். மழை நேரத்தில் மின்தடை ஏற்படும் போது மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது ஒரு பகுதியில் மின்தடை சரி செய்த பின்பே அடுத்த பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் மக்கள் மின்தடை ஏற்பட்ட பின்னும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.மரக்கிளை முறிவு ஏற்பட்டு மின்தடை ஏற்பட்டிருந்தால் தீயணைப்புத்துறையினர் வந்து மின் மரத்தை அகற்றிவிட்ட பின்னும் மின் ஊழியர்கள் வர தாமதம் ஏற்படுகிறது. அந்தளவுக்கு பற்றாக்குறையால் அங்குமிங்கும் ஓடி அலைகின்றனர். ஒவ்வொரு மழைக்காலம் வரும் போதும் மின் ஊழியர்கள், பொறியாளர்கள் புலம்பி தவிக்கின்றனர். தி.மு.க., அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதாக கூறியிருந்தது. ஆனால் தற்போது வரை செய்யவில்லை. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கும் சூழல் உள்ளது.பணியாளர் பற்றாக்குறையால் கூடுதல் மன உளைச்சலோடு பணிபுரியும் மின் ஊழியர்கள் கவனக்குறைவால் மின் விபத்துக்கு ஆளாகின்றனர். பலர் மரணமே அடைந்துள்ளனர். இதே நிலையிலான மின் விபத்துக்கள் தான் புகார்கள் மீது ஏற்படும் தாமதத்தால் நடக்கிறது. பொறியாளர்களும் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே இதை உணர்ந்து அரசு விரைந்து மின் ஊழியர்கள் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ