உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., செண்பகத் தோப்பில் மலையேற்றம்; வெளியூர் மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு

ஸ்ரீவி., செண்பகத் தோப்பில் மலையேற்றம்; வெளியூர் மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு

ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பில் மலையேற்றம் செல்வதற்கு வெளியூர் மாவட்ட மக்கள் முன்பதிவு செய்து மிகுந்த ஆர்வத்துடன் டிரக்கிங் சென்று வருகின்றனர்.தமிழகத்தில் இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தவும், இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் 40 அழகிய மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கி தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தினை அக்.,24 முதல் தமிழக அரசு செயல் படுத்தி உள்ளது. இதனையடுத்து இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பல்வேறு மலை ஏற்ற பாதைகளில் இயற்கை ஆர்வலர்கள் பயணிக்க துவங்கியுள்ளனர்.இத்திட்டத்தின் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பில் இருந்து வ.புதுப்பட்டி வரை 9 கி.மீ., துாரம் மலையேற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் முன்பதிவு செய்தவர்களை வனத்துறையினர் மலையேற்றத்திற்கு அழைத்து செல்கின்றனர்.இதில் தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு இணையதளம் மூலம் முன்பதிவு செய்து மலைேயற்றம் செல்வதற்கு, உள்ளூரைச் சேர்ந்தவர்கள் யாரும் முன் வராத நிலையில் தற்போது வெளியூர் மக்கள் முன்பதிவு செய்து ட்ரக்கிங் சென்று வருகின்றனர்.இதன்படி முதல் நாளான நவ., 1-ல் அருப்புக்கோட்டையை சேர்ந்த ஒருவரும், நவ.,2ல் மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியை சேர்ந்த ஒரு குழுவினரும், நவ., 3ல் மதுரையை சேர்ந்த ஒருவரும் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து மலையேற்றம் சென்று திரும்பினார். இதேபோல் மற்ற மலையேற்ற வழித்தடங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் இணையதளம் வழியாக முன்பதிவு செய்து மலையேற்றம் சென்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ