மேலும் செய்திகள்
பார்வையாளர் ஆலோசனை கூட்டம்
09-Feb-2026
விருதுநகர்: விருதுநகரில் எஸ்.ஐ.ஆர்., பணிகளில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. வாக்காளர் பட்டியல் பார்வையாளரான தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். கலெக்டர் சுகபுத்ரா முன்னிலை வகித்தார். இதில் எஸ்.ஐ.ஆர்., 2026ல் படிவம்- 6, 7, 8 ஆகியவற்றை, தொடர்புஉடைய வாக்காளர் பதிவு அலுவலர்கள் முடிவு செய்த விதம், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் பணிகள், வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் குறியீடு குறித்து கேட்டறியப்பட்டது. டி.ஆர்.ஓ.,ஆனந்தி, அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
09-Feb-2026