உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சுருள் பாசிகள் பயிற்சி பட்டறை

சுருள் பாசிகள் பயிற்சி பட்டறை

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரியில் விலங்கியல் துறை சார்பாக மாணவர்களுக்கு சுருள் பாசிகள் பயிற்சி பட்டறை நடந்தது.அருப்புக்கோட்டை நாடார் கல்லுாரியின் தலைவர் சுதாகர் ஆலோசனைகள் வழங்கினார். செயலர் சங்கரசேகரன் தலைமை வகித்தார். முதல்வர் செல்லத்தாய், துறைத்தலைவர் பகவதி யப்பன் முன்னிலை வகித்தனர். மாணவி கீர்த்திகா வரவேற்றார். சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லுாரியைச் சேர்ந்த பேராசிரியர் மணிவண்ணன் பேசினார்.சுருள் பாசிகள் மூலம் மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும், மருத்துவ சத்துக்கள் நிறைந்தது எனவும், விண்வெளிக்கு செல்பவர்கள் இது முக்கிய உணவாக உள்ளது என விளக்கினார். ஏற்பாடுகளை பேராசிரியர் பாஸ்கர் செய்தார். மாணவி காயத்ரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ