ஸ்ரீவி., லயன்ஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் : இந்திய தொழில்கல்வி கூட்டமைப்பு மற்றும் ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜர் கணிதப் போட்டி நடந்தது. 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றதில் 335 மாணவர்கள் இறுதி தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 28 மாணவர்கள் தகுதி பெற்றனர்.இறுதிப் போட்டியில் 12ஆம் வகுப்பு மாணவர் நிதீஷ் குமார் முதலிடம், மாணவர் ஆதித்யன், 11ம் வகுப்பு மாணவர் துரை ஈஸ்வரன் மூன்றாம் இடம் பெற்று வெற்றி பெற்றனர்.சாதனை மாணவர்களை பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, இயக்குனர் கோபாலகிருஷ்ணன், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், முதல்வர் சுந்தர மகாலிங்கம், துணை முதல்வர் முகமது மைதீன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்.