ஒரே மாதிரியான ஊதியம் வேண்டும் மாநில பொதுச்செயலாளர் பேட்டி
விருதுநகர் : ஓ.எச்.டி., ஆபரேட்டர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும், என தமிழ்நாடு கிராம மேல்நிலைத் தொட்டி இயக்குனர், துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.ராமலிங்கம் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பணிபுரிகிற ஓ.எச்.டி., ஆபரேட்டர்கள், துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் 1 முதல் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். ஓ.எச்.டி., ஆபரேட்டர்களுக்கு அகவிலைப்படி ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரூ.100 வழங்கப்படுகிறது. மற்ற துறைகளுக்கு வழங்குவது போல் சதவீத அடிப்படையில் வழங்க வேண்டும். மேலும் ஓ.எச்.டி., ஆபரேட்டர்களுக்கு துாய்மை பணியாளர்களுக்கு வழங்குவது போல் வீட்டு வாடகை படி, மருத்துவ படி போன்ற சலுகைகள் வழங்க வேண்டும்.2000ம் ஆண்டுக்கு முன்னும், பின்னும் என அரசாணை எண் 119 படி தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான நிலையான ஊதியம் வழங்க வேண்டும். துாய்மை காவலருக்கு இ.எஸ்.ஐ., பி.எப்., பணி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள் இவர்களுக்கு ஆறு மாதத்துக்கு ஒரு முறை சீருடை மாஸ்க் பணி உபகரணங்கள் தவறாமல் வழங்கப்பட வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபரில் அனைத்து கலெக்டர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார்.